தமிழ்நாட்டின் திருச்சி, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதோடு இது பழங் கற்கால மற்றும் இடைக் கற்கால வாழ்விடங்களைக் குறிக்கிறது.
முக்கியமாக குவார்ட்ஸால் செய்யப்பட்ட கை கோடாரிகள், வெட்டுகத்தி, கொடுவாள், கற்செதில்கள் மற்றும் பல்முனை வெட்டு கருக்கல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில் அடங்கும்.
குரும்பப்பட்டி, கல்லிக்குடி, வால்கரடு, வீரமலை, நடுக்காட்டுப்பட்டி, முள்ளிப்பட்டி, மலம்பட்டி, சருகுமலை, சித்தர்மலை, தலைமலை ஆகிய இடங்களில் தளங்கள் கண்டறியப்பட்டன.
இந்தத் தளங்களில் உள்ள நுண்கற்காலக் கருவிகள், இப்பகுதியை வரலாற்றுக்கு முந்தைய கட்டத்தின் இறுதிக்காலத்தை சேர்ந்தவையாக குறிப்பிடுகின்றன.