TNPSC Thervupettagam

காவல் துறை ஆர்டர்லி முறை ஒழிப்பு

February 8 , 2026 9 days 42 0
  • காவல் துறை உதவியாளர் (ஆர்டர்லி) முறையை ஒழிப்பதற்காக 2026 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
  • இந்த நடைமுறையை ஒழிப்பதை கண்காணிப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப் பட்டு உள்ளன.
  • இந்தக் குழுக்களில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO), கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (AdSP) மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
  • இந்தக் குழுக்கள் புகார்களைச் சேகரித்து, தகவல்களைத் திரட்டி, காவல் துறையினர் மூத்த அதிகாரிகளின் வீட்டு அல்லது தனிப்பட்ட பணிகளுக்குப் பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதி செய்யும்.
  • இதன் அமலாக்கம் குறித்த அறிக்கைகள் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் உள்துறைச் செயலாளருக்கு அனுப்பப்பட வேண்டும்.
  • காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) மற்றும் மாநில அரசு இந்த உத்தரவு பின்பற்றப் படுவதைக் கண்காணிக்கும், மேலும் உத்தரவை மீறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்