தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களைப் பதிவு செய்வதற்கான இணையவழி அமைப்பை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது, இதன் மூலம் மக்கள் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் பதிவு செயல்முறையை முடிக்க முடியும்.
ஆவணப் பதிவை எளிதாக்கவும், சார்பதிவாளர் அலுவலகங்களுக்குச் செல்வதைக் குறைக்கவும், பதிவுத்துறை 24×7 இணையவழிப் பதிவு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த வசதியானது மனைகளின் முதல் விற்பனை, அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைப் பத்திரங்கள் மற்றும் வங்கிக் கடன்கள் தொடர்பான அடமான மற்றும் மீட்புப் பத்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
சார்பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்டவுடன், டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணங்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்; மேலும் பதிவு செய்யப் பட்ட அலைபேசி எண்ணுக்கு புலனம்/வாட்ஸ்அப் மூலமாகவும் ஆவணங்கள் பகிரப்படும்.
கைரேகை அல்லது கருவிழி அங்கீகாரம் மூலம் ஆவணம் எழுதித் தருபவர்கள், உரிமை கோருபவர்கள் மற்றும் சாட்சிகளின் ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது; மேலும் எதிர்காலத்தில் இணையவழி முறையை முழுமையாக கட்டாயமாக்க துறை திட்டமிட்டுள்ளது.