TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் குறுவை நெல் சாகுபடி பரப்பு சரிவு

August 1 , 2026 4 days 59 0
  • காவிரி ஆற்று நீர் பற்றாக்குறை காரணமாகத் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடி ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் குறைந்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு ஜூலை 27 நிலவரப்படி, குறுவை சாகுபடி 3.87 லட்சம் ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், இது 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 5.05 லட்சம் ஏக்கராக இருந்தது.
  • தஞ்சாவூர் அதிக சாகுபடி பரப்பளவை (1.29 லட்சம் ஏக்கர்) பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை (97,000 ஏக்கர்) மற்றும் திருவாரூர் (88,700 ஏக்கர்) உள்ளன.
  • ஜூன் 1 முதல் ஜூலை 28 வரைத் தமிழ்நாடு 3.57 ஆயிரம் மில்லியன் கன அடி (டிஎம்சி) காவிரி நீரை மட்டுமே பெற்றுள்ளது, இதன் விளைவாக சுமார் 34 டிஎம்சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
  • நீர்வரத்து மேம்படாவிட்டால், சம்பா-தாளடி நெல் சாகுபடி அதன் வழக்கமான 12 லட்சம் ஏக்கரில் பாதியளவிற்கும் குறைவாகவே இருக்கக்கூடும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்