October 8 , 2025
2 days
31
- தமிழ்நாட்டின் முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் மூலம் 2023 ஆம் ஆண்டில் புற்றுநோயியல் சிகிச்சைகளுக்காக 142 கோடி ரூபாய் செலவிடப் பட்டது.
- இந்த செலவு ஆனது 2024 ஆம் ஆண்டில் 147 கோடி ரூபாயாக உயர்ந்து 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 84 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
- இந்தத் திட்டமானது, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை நெறிமுறைகளுடன் மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சுப் புற்று நோயியல் ஆகியவற்றிற்கான உதவியினை வழங்குகிறது.
- இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவப் புற்றுநோயியல் துறைக்காக 183 மருத்துவமனைகளும், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறைக்காக 171 மருத்துவமனைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.
- CMCHIS மூலம் 52 மருத்துவமனைகள் கதிர்வீச்சு புற்றுநோயியல் சேவைகளை வழங்குகின்றன.
Post Views:
31