TNPSC Thervupettagam

தரநிலை மற்றும் ஒப்புமை மதிப்பீடு

April 6 , 2019 2312 days 701 0
  • தரநிலை மற்றும் ஒப்புமை மதிப்பீட்டுத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக இந்தியத் தரநிலை அமைப்பானது டெல்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • ஐஐடி – டெல்லி ஆனது தரநிலையாக்கத்திற்குத் தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான உள்கட்டமைப்பு வசதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. BIS (Bureau of Indian Standards) ஆனது இத்திட்டங்களுக்காக ஐஐடி-டெல்லிக்கு நிதியுதவியை அளிக்கும்.
  • BIS என்பது BIS சட்டம், 2016-ன் கீழ் உருவாக்கப்பட்ட இந்தியாவின் தேசியத் தரநிலைகள் அமைப்பாகும். BIS-ன் பொது இயக்குநர் சுரினா ராஜன் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்