தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியம் (NIIF - National Investment and Infrastructure Fund) ஒரு தனியார் முதலீட்டு நிறுவனமான ரோடிஸ் மற்றும் உலகளாவிய போக்குவரத்து உள்கட்டமைப்பை செயல்படுத்தும் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தியாவில் சாலைத் திட்டங்களில் 2 பில்லியன் டாலர்கள் மதிப்பில் முதலீடு செய்வதற்கான ஒரு தளத்தை உருவாக்கியுள்ளன.
NIIF என்பது இந்தியாவின் முதலாவது தன்னிச்சையான சொத்து நிதியம் ஆகும். இது இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிதியை உருவாக்கப்பட்டதன் நோக்கமானது புதிதாகத் தொடங்கப்படவுள்ள திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள வணிக ரீதியிலான திட்டங்களில் உள்கட்டமைப்பு முதலீட்டின் மூலம் பொருளாதாரத் தாக்கத்தை அதிகப்படுத்துவதாகும்.
NIIF-க்கான மூலதனமானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் உள்ள நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்படுகின்றது.