ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைமைச் செயலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்கள் ஆகியவை ஸ்ரீநகரில் மீண்டும் திறக்கப்படவிருக்கின்றன.
ஜம்மு காஷ்மீரின் கோடைக் காலத் தலைநகர் ஸ்ரீநகர் ஆகும். இது மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கோடைக் காலத் தலைநகராக விளங்கும்.
நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஜம்மு காஷ்மீரின் குளிர்காலத் தலைநகர் ஜம்மு ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜம்மு காஷ்மீரில் இரண்டு முறை நடைபெறும் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு ஆகியவற்றிற்கிடையேயான தலைநகர் மாற்றமானது “தர்பார் நகர்வு” என்றழைக்கப்படுகின்றது.
இது 1872 ஆம் ஆண்டில் தோஹ்ரா அரசர் மஹாராஜா ரன்பீர் சிங் என்பவரால் தொடங்கப்பட்டது.