இந்தியக் கடற்படைக்காக கமோவ் கா – 31 என்ற வகையைச் சேர்ந்த 10 ரஷ்ய வானூர்திகளை வாங்குவதற்குப் பாதுகாப்பு கொள்முதல் ஆணையம் (DAC - Defence Acquisition Council) ஒப்புதல் வழங்கியுள்ளது.
DAC ஆனது பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையின் கீழ் செயல்படுகின்றது.
இந்த வானூர்திகள் (ஹெலிகாப்டர்கள்) வான்வழி முன்னறிவிப்பு மற்றும் கட்டுப்பாட்டு வானூர்திகளாகும்.
எனவே, கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் போர்க் கப்பல்களில் இவை பொருத்தப்படவிருக்கின்றன.
விமானம் தாங்கிக் கப்பல்கள் பின்வரும் பணிகளை மேற்கொள்ளும்போது வான் பகுதியை ஆக்கிரமித்துப் பாதுகாப்பதற்கு இது பயன்படுத்தப்படவிருக்கின்றது.