2018 ஆம் ஆண்டின் மொரியின் அபாய கண்ணோட்ட ஆய்வின்படி, (MORI Perils of Perception Index) இந்திய நாடானது “தவறான கண்ணோட்டக் குறியீட்டில்” 12-வது இடத்தில் உள்ளது. இந்த ஆய்வானது தன்னிச்சையான சந்தை ஆராய்ச்சி நிறுவனமான “Ipsos India” என்ற நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த குறியீட்டில் இத்தாலி, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, சிலி, அர்ஜென்டினா மற்றும் இதர நாடுகளைவிட இந்தியா பின்தங்கி உள்ளது.
இந்த குறியீட்டில் தாய்லாந்து, மெக்சிகோ, துருக்கி, மலேசியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இந்தியாவை விட மிகவும் பின்தங்கி உள்ளன.