2025 ஆம் ஆண்டில் இந்தியா தாதாபாய் நௌரோஜி அவர்களின் (1825–1917) 200வது பிறந்த நாளைக் கொண்டாடியது.
இத்தினம் ஒரு தேசியவாதத் தலைவர், பொருளாதாரச் சிந்தனையாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என்ற அவரது பாரம்பரியத்தைக் கௌரவிக்கிறது.
அவர் 1825 ஆம் ஆண்டு செப்டம்பர் 04 ஆம் தேதியன்று பம்பாயில் பிறந்தார் மற்றும் எல்பின்ஸ்டன் நிறுவனத்தில் படித்த அவர் பின்னர் எல்பின்ஸ்டன் கல்லூரியில் முதல் இந்தியப் பேராசிரியரானார்.
பிரிட்டிஷ் ஆட்சி ஆனது சம்பளம், ஓய்வூதியம், பணம் அனுப்புதல் மற்றும் சமமற்ற வர்த்தகம் மூலம் இந்தியாவின் வளங்களை எவ்வாறு சுரண்டியது என்பதைக் காட்டும் Drain of Wealth கோட்பாட்டினை நௌரோஜி உருவாக்கினார்.
அவர் இந்திய தேசிய காங்கிரஸின் (INC) ஸ்தாபன உறுப்பினராக இருந்தார் என்பதோடுஅவர் 1886, 1893 மற்றும் 1906 ஆம் ஆண்டுகளில் அதன் தலைவராகவும் பணியாற்றினார்.
இவர் 1892 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் (MP) முதல் இந்திய உறுப்பினர் ஆவார்.
அவர் சுயராஜ்யம், அரசியலமைப்பு முறைகள் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஆதரித்தார் என்பதோடுமேலும் திலகர், கோகலே மற்றும் மகாத்மா காந்தி போன்ற தலைவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருந்தார்.
நௌரோஜி இலண்டன் இந்தியச் சங்கம் (1865) மற்றும் கிழக்கிந்தியச் சங்கம் (1866) போன்ற அமைப்புகளை இணைந்து நிறுவினார்.
அவர் "இந்தியாவின் முதுபெரும் மனிதர்" மற்றும் "இந்தியாவின் அதிகாரப் பூர்வமற்ற தூதர்" என்று நினைவு கூரப்படுகிறார்.
அவரது 1906 ஆம் ஆண்டு INC தலைமை உரையே சுயராஜ்ஜியத்தினை ஒரு தேசிய இலக்காக ஏற்றுக் கொண்ட முதல் உரையாகும்.