- இந்த மசோதாவானது சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை (Mines and Minerals Development and Regulation - MMDR) சட்டம், 1957 மற்றும் நிலக்கரிச் சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 2015 (Coal Mines (Special Provisions) Act - CMSP Act) ஆகியவற்றைத் திருத்துகின்றது.
- MMDR சட்டமானது இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த சுரங்கத் துறையையும் ஒழுங்குபடுத்துகின்றது.
- இது திட்டங்களைச் செயல்படுத்துதல், எளிதாகத் தொழில் தொடங்குதல், நடைமுறைகளை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றை விரைவுபடுத்துவதுடன் தாதுக்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்க இருக்கின்றது.
- 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், திறந்தவெளி விற்பனைக்காக (ஏலம்) நிலக்கரிச் சுரங்கத் துறையில் நேரடி வழிமுறையின் கீழ் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை (foreign direct investment - FDI) மத்திய அரசு அறிவித்துள்ளது. அதோடு நிலக்கரியைத் தூய்மையாக்கல் போன்ற அதனோடு தொடர்புடைய உள்கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளது.
- இது எஃகு மற்றும் மின்சக்தி ஆகியவற்றிற்கு வெளியே பணியாற்றும் நிறுவனங்களுக்கும் இந்தத் துறையை அணுக அனுமதிக்கின்றது. அத்துடன் இது நுகர்வோர் கட்டுப்பாடுகளையும் நீக்குகின்றது.
- இது ஒரு திறனுள்ள எரிசக்திச் சந்தையை உருவாக்கி அதிக போட்டியைக் கொண்டு வருவதோடு நிலக்கரி இறக்குமதியையும் குறைக்க இருக்கின்றது.
- கடந்த ஆண்டு இந்தியா 235 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்தது. அதில் 171,000 கோடி ரூபாய் மதிப்பிலான 135 மெட்ரிக் டன் நிலக்கரியை உள்நாட்டு இருப்புக்களிலிருந்து பூர்த்தி செய்திருக்க முடியும்.
- இதன் மூலம் இந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் கோல் இந்தியா நிறுவனத்தின் முற்றுரிமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
இந்த மசோதாவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள்
- தற்போது, நிலக்கரி மற்றும் லிக்னைட் ஆகியவற்றின் வளவாய்ப்பு மற்றும் சுரங்கம் ஆகியவற்றிற்கு முறையே வளவாய்ப்பு உரிமம் மற்றும் சுரங்க குத்தகை என தனி உரிமங்கள் வழங்கப் படுகின்றன.
- இந்த மசோதாவானது ஒருங்கிணைந்த வளவாய்ப்பு உரிமம் மற்றும் சுரங்க குத்தகை ஆகியவற்றிற்கான நிலக்கரி / லிக்னைட் தொகுதிகளின் ஒதுக்கீட்டிற்காக ஒரு புதிய வகை உரிமத்தைச் சேர்க்கின்றது.
- மத்திய அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட படி, சொந்த நுகர்வு, விற்பனை அல்லது வேறு எந்த நோக்கங்களுக்காகவும் நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள நிறுவனங்கள் அனுமதிக்கப் பட இருக்கின்றன.
- நிலக்கரி மற்றும் லிக்னைட் தொகுதிகளின் ஏலத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவில் எந்தவொரு நிலக்கரி சுரங்க அனுபவமும் நிறுவனங்கள் கொண்டிருக்க வேண்டியது இல்லை என்று இந்த மசோதா தெளிவுபடுத்துகின்றது.
- முந்தைய குத்தகைதாரருக்கு வழங்கப்பட்ட பல்வேறு ஒப்புதல்கள், உரிமங்கள் மற்றும் அனுமதிகள் ஆகியவை அடுத்து வரும் ஏலதாரருக்கு இரண்டு வருட காலத்திற்கு நீட்டிக்கப்படும் என்றும் இந்த மசோதா கூறுகின்றது.
- இந்தக் காலகட்டத்தில், புதிய குத்தகைதாரர் சுரங்க நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கப் படுவர்.
- MMDR சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட தாதுக்களுக்கான சுரங்க குத்தகைகள் (நிலக்கரி, லிக்னைட் மற்றும் அணுத் தாதுக்கள் தவிர மற்ற கனிமங்கள்) குத்தகை காலம் முடிவடையும் போது ஏலம் விடப்படுகின்றன.
- சுரங்க குத்தகை காலாவதியாகும் முன்னரே ஏலம் எடுக்க மாநில அரசுகள் முன்கூட்டியே அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று இந்த மசோதா கூறுகின்றது.