பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் எட்டு கோடி எல்பிஜி எரிவாயு இணைப்புகள் வழங்க வேண்டும் என்ற இலக்கை மத்திய அரசு 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் எட்டியுள்ளது.
ஆனால் ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டுமே மண்ணெண்ணெய்ப் பயன்பாடற்ற மாநிலங்களாக உருவெடுத்துள்ளன.
தில்லி, சண்டிகர், டாமன் & டையு, தாத்ரா & நாகர் ஹவேலி, அந்தமான் நிக்கோபார் தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய ஒன்றியப் பிரதேசங்கள் மண்ணெண்ணெய்ப் பயன்பாடற்ற ஒன்றியப் பிரதேசங்களாக உருவெடுத்துள்ளன.
இத்திட்டம் பற்றி
இது 2016 ஆம் ஆண்டில் மே மாதத்தில் தொடங்கப்பட்டது.
இது வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள பெண்களுக்கு எல்பிஜி (திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு) எரிவாயு இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.