'தான்வீர்' என்பது கிராம ஊராட்சிகளில் உள்ள உடனடி கணினித் தேவையை நிவர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் உள்ளூர் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நீண்ட கால, குடிமக்கள் சார்ந்த ஒரு கட்டமைப்பாக உருவெடுக்கும் வகையில் வடிவமைக்கப் பட்ட ஒரு தளமாகும்.
இது ஒரு வெளிப்படையான, முழுமையான டிஜிட்டல் மற்றும் சரிபார்க்கக்கூடிய தளமாகும்; இது இந்தியாவில் உள்ள கிராம ஊராட்சிகளின் அடையாளம் காணப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புத் தேவைகளுக்குப் பங்களிக்கக் குடிமக்கள் மற்றும் அமைப்புகளை அனுமதிக்கிறது.
இதன் மூலம், ஒவ்வொரு கிராம ஊராட்சியும் டிஜிட்டல் வசதி கொண்டதாகவும், இணைப்பு வசதி பெற்றதாகவும், எதிர்காலத் தேவைகளை எதிர்கொள்ளத் தயாரானதாகவும் மாற்றப்படுகிறது.
இந்த முன்னெடுப்பானது, உலகம் முழுவதும் உள்ள குடிமக்கள் தங்கள் சொந்த கிராமங்களின் வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பதன் மூலம் தங்கள் பூர்வீக வேர்களுடன் மீண்டும் இணைய ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இது தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் தரப்படுத்தப்பட்ட மற்றும் தரச் சரிபார்ப்பு செய்யப்பட்ட கணினித் தொகுப்புகளைத் தகுதியுள்ள கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாக வழங்க உதவுகிறது.
இது புது தில்லியில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தொடங்கி வைக்கப்பட்டது.
இது தேசிய தகவல் மையம் (NIC) மற்றும் DigiHaat ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது.