TNPSC Thervupettagam

திட்டங்கள் மீதான NBW அனுமதி

May 12 , 2020 1927 days 837 0
  • பிரதம மந்திரியின் தலைமையிலான தேசிய வனவுயிர் வாரியமானது (NBW - National Board for Wildlife) கடைசியாக 2014 ஆம் ஆண்டில் கூடியது.
  • 6 ஆண்டுகளுக்குப் பிறகு இது சமீபத்தில் கூடி பின்வரும் திட்டங்களுக்கு தனது அனுமதியினை  வழங்கியுள்ளது. 
  • கர்நாடகாவில் உள்ள ஷராவதி சிங்கவால் குரங்குச் சரணாலயத்தில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்தல்.
  • உத்தராகாண்டின் டேராடூன் மற்றும் டெஹ்ரி கார்வால் மாவட்டங்களில் பரவி இருக்கும் பினோங் வனவிலங்குச் சரணாலயத்திற்கு அருகில் லக்வார் பல்நோக்குத் திட்டத்தை (300 மெகா வாட்) அமைத்தல் மற்றும் அதனைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வருதல்.
  • தெலுங்கானாவின் அம்ராபாத் புலிகள் வலசைப் பாதையின் வழியாக ஒரு இரயில்வே பாதையை அமைத்தல்.
  • கோவாவில் மொல்லெம் வனவிலங்குச் சரணாலயத்தின் வழியாக நெடுஞ்சாலை விரிவாக்கம்.
  • அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் உள்ள திபாங் நதியில் எட்டாலின் நீர்மின் திட்டம்.
  • திபாங் என்பது அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் வழியாகப் பாயும் பிரம்மபுத்திரா நதியின் ஒரு கிளை நதியாகும்.

திபாங் பள்ளத்தாக்கு
  • திபாங் பள்ளத்தாக்கு என்பது இந்தியாவின் பல்லுயிர்ப் பெருக்க மண்டலங்களில் ஒன்றாக உள்ளது.
  • இது இடு மிஸ்மி சமூகத்திற்கான வாழ்விடமாகவும் உள்ளது. 
  • இது துணை-வெப்ப மண்டல பசுமை மாறா நீண்ட இலைகள் கொண்ட காடுகள் மற்றும் துணை வெப்ப மண்டல மழைக் காடுகளாகும்.
  • இந்தத் திட்டமானது இமயமலையில் மிகவும் செறிந்த பல்லுயிர்ப் பெருக்க புவியியல் மண்டலத்தின் கீழும் உலகின் மிகப்பெரிய பல்லுயிர்ப் பெருக்க இடங்களில் ஒன்றின் கீழும் வருகின்றது.
  • பரிந்துரைக்கப்பட்ட இந்தத் திட்டமானது பேலியோ ஆர்க்டிக், இந்தோ-சீனா, இந்தோ-மலேயா உயிரிப் புவியியல் பகுதிகளில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்