November 19 , 2025
2 days
24
- பூடானின் திம்புவில் உள்ள தாஷிச்சோட்சோங்கின் கிராண்ட் குயென்ரியில் புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
- இந்த கண்காட்சியில் சர்வதேசப் புத்த கூட்டமைப்பு (IBC) நிர்வகிக்கும் மூன்று கருத்துரு சார் கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
- முதல் கண்காட்சி இந்தியாவில் 'மகத்தான குரு' என அழைக்கப்படும் குரு பத்ம சாம்பவாவின் வாழ்க்கை மற்றும் புனித தளங்களைக் காட்டுகிறது.
- இரண்டாவது கண்காட்சி, புத்தர் நினைவுச் சின்னங்களின் அகழ்வாராய்ச்சி மற்றும் முக்கியத்துவம் உட்பட, சாக்கியர்களின் புனித மரபுகளை வெளிக் கொணர்கிறது.
- மூன்றாவது கண்காட்சியானது புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை முன் வைக்கிறது.
- இந்தக் கண்காட்சி பூடானின் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக்கின் 70வது பிறந்த நாளுடன் ஒன்றி வருகிறது.

Post Views:
24