திருத்தப்பட்ட முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் வழங்கீட்டு விதிமுறைகள்
March 31 , 2025 30 days 105 0
பொருளாதாரத்தின் முன்னுரிமைத் துறைகளுக்கு மிகச் சிறப்பான முறையில் இலக்கு நிர்ணயித்து அதற்கு வங்கிக் கடனை வழங்கும் முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் வழங்கீடு (PSL) குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் ஆனது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
திருத்தப்பட்ட விதிமுறைகள் ஆனது புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான கடன்களுக்கும் விரிவுபடுத்தப் படுகின்றன என்பதோடு இதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அடிப்படையிலான மின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு 35 கோடி ரூபாய் வரை வங்கிக் கடன்களை வழங்க வழிவகை செய்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியானது, நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கான (UCBs) PSL மீதான இலக்குகளை, சரி செய்யப்பட்ட நிகர வங்கிக் கடன் (ANBC) அல்லது நிதி அறிக்கையில் பதிவு செய்யப்படாத (CEOBSE) கடன் (PSL) ஆகியவற்றில் எது அதிகமாக இருக்கிறதோ, அதில் 60% ஆக உயர்த்தியுள்ளது.
இனிமேல் வங்கி சாராத நிதி நிறுவனங்களிடமிருந்து (NBFCs) வங்கிகள் வாங்கிய தங்க நகைகளுக்கு எதிராகப் பெறப்பட்ட கடன்கள் PSL ஆக தகுதி பெறாது.