TNPSC Thervupettagam

திருநெல்வேலியில் வெளிறியப் பூனைப் பருந்து

December 1 , 2025 4 days 101 0
  • பெங்களூருவில் உள்ள ATREE நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு பறவையின் பின் புறத்துடன் இணைக்கப்பட்ட ஒரு சிறிய 9.5 கிராம் எடை கொண்ட அலை பரப்பியில் இருந்து அனுப்பப்பட்ட தரவிற்கான எச்சரிக்கை சமிக்ஞையைப் பெற்றனர்.
  • அவர்களால் புவியிடங் குறியிடப்பட்ட வெளிறியப் பூனைப் பருந்து, கஜகஸ்தானில் இருந்து வந்து திருநெல்வேலியில் அதன் ஓய்வு இடத்தை அடைந்துள்ளது.
  • ஒரு நீண்டகாலத் திட்டமான ஹாரியர் வாட்ச் திட்டம், குளிர்காலத்தில் இந்தியாவிற்கு வரும் ஆறு பூனைப் பருந்து இனங்களைக் கண்காணித்துள்ளது.
  • இது கொன்றுன்ணிகள் மற்றும் அவற்றின் புல்வெளி வாழ்விடங்களைக் கண்காணிப்பதையும், புல்வெளிகள் இழப்பதால் இனங்கள் மீது ஏற்படும் தாக்கத்தை மதிப்பிடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பறவைகள் மத்திய ஆசியாவில் இனப்பெருக்கம் செய்து, குளிர்காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்திற்கு வருகின்றன.
  • IUCN அமைப்பானது, வெளிறியப் பூனைப் பருந்துகளை அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமாக வகைப்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்