இந்தியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக திறன் விளைவுகள் நிதியை உருவாக்குவதற்கான பிரச்சாரத்தை இந்திய அரசு தொடங்கி உள்ளது.
இது நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் குறைந்த வருமானம் கொண்ட பின்னணியில் உள்ள இளைஞர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிதியானது, வேலைவாய்ப்பு மற்றும் பணியில் நீடித்திருத்தல் போன்ற சரி பார்க்கப்பட்ட வேலை முடிவுகளுடன் நிதி உதவியை இணைக்கும் 'விளைவு அடிப்படையிலான நிதியளிப்பு' (OBF) முறையைப் பயன்படுத்துகிறது.
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் (MSDE) கீழ் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் (NSDC) இது வழிநடத்தப்படும்.
இது அரசு, தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியை ஒருங்கிணைக்கும் ஒரு கலப்பு நிதி மாதிரியைப் பின்பற்றுகிறது.
இது வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக திறன் தாக்கப் பத்திரம் (2021) பெற்ற வெற்றியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.