TNPSC Thervupettagam
June 4 , 2026 9 days 105 0
  • இந்திய இராணுவம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'திவ்யாஸ்திரா Mk-1' தந்திரோபாய இலக்கினை மட்டும் குறிவைத்து தாக்கும் இயந்திர வாகனத்தின் செயல்பாட்டுத் திறன் சோதனையை 2026 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று ஜோத்பூரில் நடத்தியது.
  • செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் தந்திரோபாய ஆளில்லா வான்வழி வாகனமான  திவ்யாஸ்திரா Mk-1 லக்னோவைச் சேர்ந்த 'ஹோவரிட்' என்ற பாதுகாப்புத் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனத்தால் சுமார் 95% உள்நாட்டுத் தயாரிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
  • இலக்கினை மட்டும் குறிவைத்து தாக்கும் இயந்திரம் என்பது ஒரு இலக்கை அடையாளம் கண்டு தாக்குவதற்கு முன்பு இலக்குப் பகுதியிலேயே சுற்றித் திரியக் கூடிய ஒரு ஆயுத அமைப்பாகும், மேலும் இது தற்கொலை ஆளில்லா விமானம் அல்லது கமிகேஸ் ஆளில்லா விமானம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்த அமைப்பு சுய வழிசெலுத்தல், இலக்கு அங்கீகாரம் மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கூட்டத் திறன்களைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்