TNPSC Thervupettagam

தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) குறித்த இந்தியாவின் தரநிலைகள்

April 28 , 2026 2 days 76 0
  • இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கான (ICU) குறைந்தபட்ச தரநிலைகளை இந்திய உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
  • நாடு முழுவதும் ஒரே மாதிரியான ICU உள்கட்டமைப்பு, பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் கவனிப்பை உறுதி செய்வதை இந்த வழிகாட்டுதல்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • ஒவ்வொரு ICU-விலும் ஆக்ஸிஜன் விநியோகம், செயற்கை சுவாசக் கருவிகள், கண்காணிப்புக் கருவிகள், இதயத் துடிப்பு சீராக்கிகள் மற்றும் தடையில்லா மின்சார வசதி போன்ற அத்தியாவசிய வசதிகள் இருக்க வேண்டும்.
  • 24 மணி நேரமும், பயிற்சி பெற்ற மருத்துவர்கள், கடுமையான நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு 1:1 என்ற செவிலியர்-நோயாளி விகிதம் ஆகியவற்றை இந்த விதிமுறைகள் கட்டாயமாக்குகின்றன.
  • நகர்ப்புற மற்றும் கிராமப்புற மருத்துவமனைகளில் தரமான சிகிச்சையை வழங்குவதற்காக ICU-க்கள் வெவ்வேறு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் செயல்திட்டங்களைச் சமர்ப்பிக்கவும், இவற்றைச் செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளைக் கண்டறியவும் அறிவுறுத்தப் பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்