TNPSC Thervupettagam

தாமதமான கர்ப்பக் கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

April 28 , 2026 2 days 68 0
  • 15 வயது சிறுமியின் 31 வார கர்ப்பத்தைக் கலைக்க இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
  • இனப்பெருக்க சுயாட்சி என்பது அரசியலமைப்புச் சரத்து 21-இன் கீழ் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • தேவையற்ற கர்ப்பத்தை தொடர ஒரு சிறுமியை வற்புறுத்துவது கண்ணியம், தனி உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை மீறுவதாகும் என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
  • அச்சிறுமியின் கடுமையான மன உளைச்சல் மற்றும் அவரது நல்வாழ்வுக்கான ஆபத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • மருத்துவ ரீதியான கர்ப்பக் கலைப்புச் சட்டம் பொதுவாக 24 வாரங்கள் என்ற வரம்பை நிர்ணயித்திருந்தாலும், இந்த வழக்கில் நீதிமன்றம் விதிவிலக்கு அளித்துள்ளது.
  • குறிப்பாக விதிவிலக்கான சூழ்நிலைகளில், ஒரு பெண்ணுக்குத் தனது உடலின் மீதான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை இத்தீர்ப்பு வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்