உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் உலக வானிலை அமைப்பு (WMO) ஆகியவை இணைந்து ஏப்ரல் 22, 2026 அன்று (புவி தினம்) "தீவிர வெப்பம் மற்றும் விவசாயம்" என்ற அறிக்கையை வெளியிட்டன.
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், கடும் வெப்பம் காரணமாக ஆண்டிற்கு 250 நாட்கள் வரை விவசாயப் பணிகள் பாதுகாப்பற்றதாக மாறக்கூடும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
விவசாயத் தொழிலாளர்கள் வெப்பத்தின் பாதிப்பால் இறப்பதற்கான வாய்ப்பு 35 மடங்கு அதிகமாக உள்ளது, இதனால் ஆண்டுக்கு சுமார் 470 பில்லியன் வேலை நேரம் இழக்கப் படுகிறது.
ஒவ்வொரு 1°C வெப்பநிலை உயர்விற்கும் 7.5% வரை இழப்பு ஏற்பட்டு வெப்பநிலை அதிகரிப்பால் பயிர் விளைச்சல் குறைகிறது.
குறிப்பாக இந்தோ-கங்கை சமவெளி போன்ற பகுதிகளில் சுமார் 1 பில்லியன் மக்களின் வாழ்வாதாரம் ஆபத்தில் உள்ளது.
"வெப்பப் பாதுகாப்பு வரம்பு" குறைதல் மற்றும் திடீர் வறட்சிகளின் அதிகரிப்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, விவசாய நெருக்கடி மற்றும் உற்பத்தித் திறன் மோசமடைவதையும் எடுத்துக்காட்டுகிறது.