துருக்கி நாடானது அமெரிக்காவுடன் உத்தி சார் முக்கியத்துவம் வாய்ந்த பொது அணுசக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவிலான அணு மின் நிலையங்கள் மற்றும் சிறிய அணு உலைகள் (SMRs) திட்டங்கள் அடங்கும்.
இது துருக்கியின் அணுசக்தி திறனை விரிவுபடுத்துவதையும் இருதரப்பு எரிசக்தி உறவுகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் 20 பில்லியன் டாலர் அக்குயு அணுமின் நிலையத் திட்டம் மற்றும் மொத்தம் 75.8 பில்லியன் கன மீட்டர் அளவிலான சமீபத்திய LNG ஒப்பந்தங்கள் உட்பட எரிசக்தி ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதற்கான துருக்கியின் பரந்த உத்தியைத் தொடர்ந்து இது மேற்கொள்ளப் பட்டுள்ளது.