துருக்கியின் கிசிலெல்மா ஆளில்லா விமானம் (UAV) ஆனது, காட்சிக்கு அப்பாற்பட்ட (BVR) தாக்குதல் வரம்பு கொண்ட எறிகணையைப் பயன்படுத்தி ஒரு விமானத்தைச் சுட்டு வீழ்த்திய உலகின் முதல் ஆளில்லா விமானமாக மாறியது.
இந்தச் சோதனையின் போது, UAV ஆனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட GÖKDOĞAN BVR எறிகணையை ஏவியது.
கிசிலெல்மா ஆனது MURAD மின்னணு முறையில் ஆய்வு செய்யப்பட்ட தொகுப்பு (Active Electronically Scanned Array-AESA) ரேடாரைப் பயன்படுத்தி இலக்கைக் கண்டறிந்து கண்காணித்தது.
இந்தச் செயல் விளக்கம் ஆனது, பணியாளர்கள் இல்லாத போர் விமானத்தினால் மேற் கொள்ளப் பட்டு சரி பார்க்கப்பட்ட முதல் மிகவும் நீண்ட தூர தாக்குதல் வரம்புடைய வான்வழிப் போர் ஆகும்.