TNPSC Thervupettagam

தூத்துக்குடி கடற்கரையில் சதுப்புநிலக் காடுகள் பாதுகாப்பு முயற்சிகள்

July 24 , 2026 4 days 61 0
  • தூத்துக்குடி கடற்கரையில், நான்கு ஆண்டுகளில் 140 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் சதுப்புநிலக் காடுகள் மீட்டெடுக்கப்பட்டு, சதுப்புநிலக் காடுகள் பாதுகாப்பு முயற்சிகள் செழித்து வருகின்றன.
  • பசுமைத் தமிழ்நாடு இயக்கம், பருவநிலை மாற்றப் பதிலுக்கான தமிழ்நாடு பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டம் (TNGPCCR), தமிழ்நாடு கடல் வளங்களை நீடித்த முறையில் பயன்படுத்துதல் மற்றும் நீலப் பொருளாதாரம் (TN-SHORE) இயக்கம் மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளின் கீழ் இந்த மீட்டெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • கடற்கரை அரிப்பு, புயல் அலைகள், ஓதப் பெருக்கெடுப்பு மற்றும் உவர்நீர் ஊடுருவல் ஆகியவற்றிற்கு எதிராக சதுப்புநிலக் காடுகள் ஒரு இயற்கையான தடுப்பாகச் செயல் படுகின்றன.
  • தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரம் அமைந்துள்ள புன்னக்காயல் பகுதியில் மீட்டெடுக்கப்பட்ட பகுதிகளில் வனத்துறை கவனம் செலுத்தி வருகிறது.
  • மீட்டெடுப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஓத நீர் சதுப்புநிலச் சூழல் அமைப்பின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, மீன்முள் வடிவக் கால்வாய் வடிவமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
  • அவிகென்னியா மரினா போன்ற சதுப்புநிலத் தாவர இனங்கள், அவற்றின் அதிக உப்புத்தன்மை தாங்கும் திறன் காரணமாக, மீட்டெடுக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் நடப்பட்டுள்ளன.
  • அதே நேரத்தில், ரைசோஃபோரா முக்ரோனாட்டாவும் பொருத்தமான இடங்களில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த சதுப்புநிலக் காடுகள், வளமான கடல் மற்றும் கழிமுகப் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு ஆதரவளிப்பதோடு, மீன்கள், இறால்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களுக்கு ஒரு முக்கிய வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கத் தளமாகவும் விளங்குகின்றன.
  • இதன் மூலம் உள்ளூர் மீன்வளத்திற்கு அவை குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அளிக்கின்றன.
  • மேலும், கார்பன் பிரித்தெடுத்தல் மூலம் பருவநிலை மாற்றத் தணிப்பிலும் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  • அத்துடன், கடலோர மற்றும் சதுப்புநிலக் காடுகளைச் சார்ந்து வாழும் சமூகங்களின் வாழ்வாதாரத்தைத் தக்க வைக்கும் அத்தியாவசியச் சூழல் மண்டலச் சேவைகளையும் வழங்குகின்றன.
  • புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா பரவுவதைத் தடுப்பதற்காக, சால்வடோரா பெர்சிகா போன்ற தொடர்புடைய இனங்களை நடுவதற்கான திட்டங்களும் செயல் படுத்தப் பட்டு வருகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்