தூய்மை என்பது சேவை (ஸ்வச்தா ஹை சேவா) 2019 - நெகிழிப் பயன்பாடு
September 13 , 2019 2153 days 733 0
ஸ்வச்தா ஹை சேவா 2019 ஆனது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் தொடங்கப் பட்டது.
இந்தப் பிரச்சாரத்தின் கருப்பொருள் ‘நெகிழிக் கழிவு குறித்த விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை’ என்பதாகும்.
இது செப்டம்பர் 11 முதல் அக்டோபர் 1 வரை நெகிழிக் கழிவு மேலாண்மை குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அக்டோபர் 2 ஆம் தேதியன்று நெகிழிக் கழிவுகளின் சேகரிப்பு மற்றும் அவற்றைப் பிரித்தெடுக்கப் படுவதற்கான ஒரு நாடு தழுவிய பிரச்சாரமும் நடைபெறும்.
2019 ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிக்கு முன் சேகரிக்கப்பட்ட நெகிழிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு அவை திறம்பட அகற்றப்படும்.
ஸ்வச்தா ஹை சேவா 2019ஐ அறிமுகப்படுத்திய பின்னர், பிரதமர் மோடி பசுதான் ஆரோக்கிய விக்யான் மேளாவைப் பார்வையிட்டார்.
இந்தத் திட்டத்தின் கீழ், மாடுகளின் வயிற்றில் இருந்து நெகிழிக் கழிவுகளை அகற்றுவதற்காக அவைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டன.