தேசிய மரபணுத் தொடர் (புற்றுநோய்) – இந்தியாவிற்கான குறிப்பிட்ட தீர்வுகள்
September 12 , 2019 2154 days 610 0
புற்றுநோய்க்கான தேசிய மரபணுத் தொடரை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே அறிவித்துள்ளார்.
இந்த முயற்சி புற்றுநோய் ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுச் சென்று பல்வேறு பொருளாதாரப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு சிகிச்சையை சாத்தியமாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்தத் தேசிய மரபணுத் தொடர் இந்தியாவில் உள்ள புற்றுநோய் நோயாளிகளின் மாதிரிகளைச் சேகரித்து மரபணுத் தரவுகளை ஆய்வு செய்யும்.
இந்திய மக்களுக்கு சரியான சிகிச்சை முறைகளை அடையாளம் காண இது பயன்படுத்தப்படும்.