மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் பெரும் அபராதங்களைத் திருத்தியமைத்தல்
September 12 , 2019 2301 days 724 0
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதங்களைத் திருத்துவதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகனச் சட்டம் பொதுப் பட்டியலில் உள்ளது.எனவே மாநிலங்களும் மத்திய அரசும் திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் விதிகளைத் திருத்தி வடிவமைக்க முடியும்.
மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம், 2019 ஆனது ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
அபராத விதிகள் உட்பட சட்டத்தின் 63 உட்பிரிவுகள் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன.
24 உட்பிரிவுகளுக்கு மாநிலங்கள் அபராதங்களைத் திருத்தியமைக்க முடியும்.
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகையை குஜராத் மாநில அரசு ஏற்கனவே குறைத்துள்ளது.