TNPSC Thervupettagam

தெரு நாய்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு

May 25 , 2026 14 hrs 0 min 42 0
  • ரேபிஸ் (வெறிநாய் கடியால் ஏற்படும் நோய்) தாக்கிய, குணப்படுத்த முடியாத நோய் வாய்ப்பட்ட அல்லது மிகவும் ஆபத்தான தெரு நாய்களுக்கு எதிராக, விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு (ABC) விதிகள் 2023-இன் கீழ், கருணைக்கொலை உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க உள்ளாட்சி அதிகாரிகளுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
  • அரசியலமைப்பின் 21-வது சரத்தானது, தெருநாய் தாக்குதல்களில் இருந்து குடி மக்களின் வாழ்வதற்கான உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது என்று நீதிமன்றம் கூறியது.
  • பொது இடங்களில் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடும் உரிமையை சரத்து 19(1)(d) குடிமக்களுக்கு வழங்குகிறது என்றும் அது குறிப்பிட்டது.
  • ஒவ்வொரு மாநிலமும் ஒன்றியப் பிரதேசமும், பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவப் பணியாளர்களுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு (ABC) மையத்தையாவது அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • அரசு மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோகுளோபுலின் கிடைப்பதை உறுதி செய்யுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
  • 1960 ஆம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு (ABC) விதிகள் 2023, ரேபிஸ் தாக்கிய, இறக்கும் தருவாயில் உள்ள அல்லது ஆபத்தான முறையில் காயமடைந்த நாய்களை மட்டுமே கருணைக்கொலை செய்ய அனுமதிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்