தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு - 15 வயதிற்கு உட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப்
November 8 , 2018 2444 days 789 0
நேபாளத்தின் லலித்பூரில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பின் (South Asian Football Federation - SAFF) 15 வயதிற்கு உட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் கோப்பை கால்பந்துப் போட்டியில் வங்கதேசம் பாகிஸ்தான் அணியை 3-2 என்ற கணக்கில் பெனால்டி ஷீட் அவுட் முறையில் வீழ்த்திக் கோப்பையைக் கைப்பற்றியது.
வங்கதேசம் உள்பட ஆறு அணிகள் விளையாடும் 15 வயதிற்கு உட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பின் சாம்பியன்ஸ் கோப்பையை அனைத்து போட்டிகளிலும் வெற்றி என்ற சாதனையுடன் வங்கதேசம் கைப்பற்றியிருக்கின்றது.
போட்டியை நடத்தும் நாடான நேபாளத்தை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவானது இந்த SAFF சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாவது இடத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இந்தியாவிற்கான வெற்றி வீரராக தலச்சு வன்லால் ரூத்பெலா கோல் அடித்தார்.