இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (ZSI) ஆனது, வகை பிரித்தல் பற்றிய பல்வேறு புதிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
இவை வரலாற்று ரீதியாக முதன்மை கால / தொடக்கக் காலப் பாலூட்டி உயரினம் என தவறாக வகைப்படுத்தப்பட்டிருந்த மர மூஞ்சூறு இனங்கள் ஆகும். இவற்றுள் சில மரவாழ் இனங்கள், சில பகுதியளவு மரவாழ் இனங்கள் மற்றும் பிற நிலப்பரப்பு வாழ் உயிரினங்களாக உள்ளன.
அவை தற்போது தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் பாலூட்டிகளின் பழங்கால மரபுவழி இனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
ஆனால், மர மூஞ்சூறு இனங்கள் என்பவை உண்மையான மூஞ்சூறு இனங்கள் அல்லது அணில்கள் அல்ல ஆனால் அவை ஸ்காண்டன்ஷியா எனப்படும் தனித்துவமான இன வரிசையைச் சேர்ந்தவை.
ஒரு பகுப்பாய்வு ஆனது இது தெற்காசியாவிலேயே மிகப்பெரியது மற்றும் உலகளவில் அறியப்பட்ட சுமார் 23 மர மூஞ்சூறு இனங்களில் மூன்றாவது பெரியது என்பதைக் காட்டுகிறது.