TNPSC Thervupettagam

தெற்கு-தெற்கு ஒத்துழைப்பிற்கான சர்வதேச தினம் 2026 - செப்டம்பர் 11

September 15 , 2026 13 hrs 0 min 12 0
  • வளரும் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வை ஊக்குவிப்பதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டின் இத்தினக் கொண்டாட்டம், தெற்கு-தெற்கு ஒத்துழைப்பிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தால் (UNOSSC) கூட்டப்பட்ட, ஐ.நா சபை வசதி செய்த தன்னார்வக் கூட்டமைப்பான 'தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண ஒத்துழைப்பிற்கான உலகளாவிய கூட்டமைப்பின்' தொடக்கத்தைக் குறித்தது.
  • தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு என்பது வளரும் நாடுகள் தங்கள் அறிவு, தொழில்நுட்பம், திறன்கள், வளங்கள் மற்றும் வெற்றிகரமான வளர்ச்சித் தீர்வுகளைப் பரிமாறிக்கொள்ள உதவுகிறது.
  • முக்கோண ஒத்துழைப்பு என்பது கூடுதல் தொழில்நுட்ப, நிதி அல்லது நிறுவன ஆதரவை வழங்குவதற்காக வளரும் நாடுகளை வளர்ந்த நாடுகள் அல்லது சர்வதேச அமைப்புகளுடன் ஒன்று சேர்க்கிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Solidarity Rising: Global Alliance for Inclusive and Innovative Development” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்