தெலங்கானா - ஈரான் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கல் ஒப்பந்தம்
June 18 , 2026 15 hrs 0 min 25 0
அரிய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் காப்பகப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கிப் பாதுகாப்பதற்காக, தெலங்கானா பாரம்பரியத் துறையானது, நூர் சர்வதேச நுண்-திரைப்பட மையத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தம் ஆனது 737 கையெழுத்துப் பிரதிகள், 3,091 ஓவியங்கள், 14,522 நூலகப் புத்தகங்கள் மற்றும் 101 தஸ்தாவேஜுகளை (காப்பகப் பதிவுகள்) உள்ளடக்கியது.
இந்தத் தொகுப்புகளில் பாரசீகம், உருது, அரபு மற்றும் பிற மொழிகளில் உள்ள ஆவணங்கள் அடங்கும் என்பதோடு மேலும் இந்த பணிக்கான நிதியை தெலங்கானாவிற்கு எந்த கட்டணமும் இல்லாமல் ஈரான் இஸ்லாமியக் குடியரசு அரசு வழங்கும்.
தெலங்கானா மாநில ஆவணக் காப்பகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 43 மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்கள் உள்ளன, அவற்றில் சுமார் 80% பாரசீக மற்றும் உருது மொழிகளில் உள்ள இப்பதிவுகள் கி.பி 1406 வரை பழமையானவை.
இந்த ஆவணக் காப்பகங்களில் பாமினி, குதுப் ஷாஹி, அடில் ஷாஹி மற்றும் முகலாய வம்சங்களின் பதிவுகள் உள்ளன என்ற நிலையில் மேலும் பாரசீக மொழியில் ராமாயணம் மற்றும் பாகவத மகாபுராணம், தங்க முலாம் பூசப்பட்ட காகிதத்தில் குர் ஆன் வசனங்கள் மற்றும் 10.5 மீட்டர் நீளமுள்ள அரச சுருள் போன்ற சில அரிய பொருட்களும் இதில் அடங்கும்.