புது தில்லியில் நடைபெற்ற தேசிய கரிம உணவுத் திருவிழாவை மத்திய உணவு பதப்படுத்தும் துறை அமைச்சகம் மற்றும் மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவை கூட்டாக இணைந்து துவக்கி வைத்தன.
இந்தியாவில் தன்னளவில் நடைபெறும் முதலாவது திருவிழா இதுவாகும்.
கருப்பொருள்: “இந்தியாவின் அங்ககச் சந்தைக்கான சாத்தியக் கூற்றைப் பயன்படுத்திக் கொள்ளுதல்” என்பதாகும்.
இந்தியாவில் அங்ககத் துறையானது ஆண்டுக்கு 17% என்ற வேகத்தில் வளர்ந்து வருவதாக இந்த விழாவில் அறிவிக்கப் பட்டுள்ளது.
உலகில் 9வது பெரிய அங்கக விவசாய நிலத்தையும் அதிக எண்ணிக்கையிலான உற்பத்தியாளர்களையும் கொண்ட இந்தியா அங்கக உணவுப் பிரிவில் வேகமாக வளர்ந்து வருகின்றது.
இந்தியா சுமார் 1.70 மில்லியன் மெட்ரிக் டன் (2017-18) என்ற அளவில் சான்றளிக்கப் பட்ட அங்ககப் பொருட்களை உற்பத்தி செய்தது.
இந்திய அங்ககத் துறை – தொலைநோக்குப் பார்வை - 2025 என்ற அறிக்கையின் படி, இந்தியாவின் அங்கக வணிகமானது 2025 ஆம் ஆண்டில் ரூ. 75,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
ஜெய்விக் கேட்டி தளமானது விவசாய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இது அங்கக வேளாண்மை தொடர்பான ஒரு தேசியத் திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ், அங்கக வேளாண்மையை வலுப்படுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.