தேசிய கடலோரத் திட்டம் (NCM) 2.0 செயலாக்க வழிகாட்டுதல்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புது தில்லியில் வெளியிட்டார்.
NCM 2.0 என்பது 2030–31 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும் ₹767 கோடி மதிப்பீட்டில் அங்கீகரிக்கப்பட்ட மத்திய துறை திட்டமாகும்.
இது 9 கடலோர மாநிலங்கள் மற்றும் 4 ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள இந்தியாவின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கியது.
கடலோர மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்துதல் மற்றும் நீலப் பொருளாதாரத்தை ஆதரிப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.
இந்த திட்டத்தில் கடலோர சூழ்நிலைமண்டல மறுசீரமைப்பு, மாசுக் கட்டுப்பாடு, பல்லுயிர் பாதுகாப்பு, நிலையான சுற்றுலா மற்றும் பாதிப்பு மதிப்பீடு ஆகியவை அடங்கும்.