தேசிய டிஜிட்டல் தகவல் தொடர்பு கொள்கை (NDCP – National Digital Communication Policy) - 2018
September 28 , 2018 2641 days 1146 0
மத்திய அமைச்சரவையானது தேசிய டிஜிட்டல் தகவல் தொடர்பு கொள்கை 2018க்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் இது தொலைத் தொடர்பு ஆணையத்தை டிஜிட்டல் தகவல் தொடர்பு ஆணையம் என மாற்றியமைக்கவும் அனுமதியளித்துள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பத் துறையின் நவீனகால தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தற்போதுள்ள தேசிய தொலைத் தொடர்பு கொள்கை 2012-ஐ (National Telecom Policy - 2012) இது மாற்றுகிறது.
NDCP ஆனது 5G மற்றும் கண்ணாடி இழைகள் போன்ற நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் மலிவு விலையில் நாடு முழுவதும் அதிவேக பிராட்பேண்ட் (அகலக்கற்றை இணையம்) ஊடுருவலை அதிகப்படுத்துவதன் மீது கவனம் செலுத்துகிறது.
இது டிஜிட்டல் தகவல் தொடர்புகளுக்கான நிலையான மற்றும் மலிவான அணுகலை உறுதி செய்வதற்காக ‘அலைவரிசைகளுக்கு உகந்த விலையை’ பின்பற்றுவதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கியது ஆகும்.