TNPSC Thervupettagam

தேசிய நகர்ப்புற மாநாடு 2025

December 4 , 2025 15 hrs 0 min 52 0
  • 2025 ஆம் ஆண்டு தேசிய நகர்ப்புற மாநாடு ஆனது, வளர்ச்சியடைந்த இந்தியா / விக்ஸித் பாரத் 2047 தொலைநோக்குக் கொள்கையின் கீழ் நிலையான நகர்ப்புற மேம்பாட்டினை ஊக்குவிப்பதற்காகப் புது தில்லியில் நடைபெற்றது.
  • குப்பைக் கிடங்கு சீரமைப்புப் பணிகளுக்கான துரிதப்படுத்துதல் திட்டம் (DRAP) நகரத்தின் குப்பைகளைச் சுத்தம் செய்யத் தொடங்கியது.
  • 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் 8.8 கோடி மெட்ரிக் டன் அளவிலான பழைய கழிவுகளை அகற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • திறன் மேம்பாடு மற்றும் அறிவுப் பகிர்வுக்காக என்று தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்தில் (NIUA) சுவச் பாரத் திட்டம் - அறிவு மேலாண்மை அலகு (KMU) அமைக்கப் பட்டது.
  • கொள்கை மற்றும் தரவு முன்னெடுப்புகள் மூலம் மலிவு விலையிலான நகர்ப்புற வீட்டு வசதியை ஆதரிப்பதற்காக தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்தில் (NIUA) வாழ்விட மற்றும் வீட்டு வசதி குறித்த பொதுக் கொள்கை மையம் நிறுவப்படும்.
  • GIS அடிப்படையிலான கைபேசி செயலியான IIRS சங்கலன் செயலியை, விரைவான நகர்ப்புற ஆய்வுகளுக்காக இந்தியத் தொலைதூர உணர்திறன் நிறுவனம் (IIRS) அறிமுகப் படுத்தியது.
  • நிலையான நகர்ப்புறத் திட்டங்களுக்கு தனியார் மற்றும் பலதரப்பு நிதியுதவியை ஈர்ப்பதற்காக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் (HUDCO) தலைமையிலான நகர்ப்புற முதலீட்டுச் சாளர அமைப்பு (UiWIN) அறிமுகப் படுத்தப் பட்டது.
  • பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய மலை மற்றும் இமயமலை நகரங்களில் கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சுவச் பாரத் திட்டம் - நகர்ப்புறம் 2.0 என்ற திட்டத்தின் கீழ் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான மலை மற்றும் இமயமலை நகரங்களில் நிதி அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்