TNPSC Thervupettagam

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அறிவுரை 2.0

May 22 , 2026 11 days 100 0
  • திருநங்கைகளின் நலனை உறுதி செய்வதற்காக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு அறிவுரை 2.0-ஐ வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிவுரையானது, திருநங்கைகளின் நலனை உறுதி செய்வதற்கான பத்து முக்கிய செயல் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது.
    • துல்லியமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய, பாலின வாரியான தரவு சேகரிப்பை உறுதி செய்வதற்காக, வரவிருக்கும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் பிற தேசிய ஆய்வுகளில் ‘இடைப்பாலினத்தவர்’, ‘திருநம்பிகள்’ மற்றும் ‘திருநங்கைகள்’ போன்ற தனித்துவமான பிரிவுகளைச் சேர்த்தல்;
    • சுய-அடையாளம் காணப்பட்ட பாலினத்தை அங்கீகரிப்பதையும், திருநங்கைகள் மற்றும் இடைப்பாலினத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் உறுதி செய்வதற்காக, பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம், சிறார் நீதிச் சட்டம் மற்றும் வாரிசுரிமைச் சட்டங்கள் உள்ளிட்ட சட்டங்களை மறு ஆய்வு செய்தல்;
    • திருநங்கைகள் மற்றும் இடைப்பாலினத்தவர்களுக்குப் பாகுபாடின்றி சமமான வாரிசுரிமை, வீட்டுவசதி மற்றும் சொத்துரிமைகளை உறுதி செய்தல்;
    • திருநங்கைகளின் கைது, தடுப்புக்காவல், சோதனைகள், விசாரணைகள், சிறைவாசம், இரகசியத்தன்மை மற்றும் பாலினத்தை உறுதிப்படுத்தும் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் தொடர்பாக காவல்துறை மற்றும் சீர்திருத்த நிறுவனங்களுக்கான விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) உருவாக்குதல்;
    • பாகுபாடு, வன்முறை அல்லது காவலில் ஏற்படும் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் திருநங்கைகள் மற்றும் பாலினப் பன்முகத்தன்மை கொண்ட நபர்களுக்காக பிரத்தியேக சட்ட உதவி மையங்கள், உதவி எண்கள் மற்றும் சுதந்திரமான குறைதீர்ப்பு வழிமுறைகளை நிறுவுதல்;
    • மருத்துவச் சான்றுகளைக் கோராமல், சுயமாக அடையாளம் காணப்பட்ட பாலினத்தின் அடிப்படையில் திருநங்கை மாணவர்களைக் கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதுடன், பாலின-நடுநிலை வசதிகள் மற்றும் குறைதீர்ப்பு வழிமுறைகளை உருவாக்குதல்;
    • அனைவரையும் உள்ளடக்குவதை ஊக்குவிக்கவும் பாகுபாட்டைக் குறைக்கவும் ஆசிரியர்கள், ஆலோசகர்கள், காவல்துறை, சிறைப் பணியாளர்கள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குக் கட்டாயப் பாலின உணர்திறன் பயிற்சி அளித்தல்;
    • பாலினத்தை உறுதிப்படுத்தும் சுகாதாரப் பாதுகாப்புக்கான தரப்படுத்தப்பட்ட மற்றும் நெறிமுறை சார்ந்த மருத்துவ நெறிமுறைகளை உருவாக்குதல், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் திருநங்கைகளின் சுகாதாரத் தேவைகளுக்குச் சமமான காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குதல்;
    • உயிர்காக்கும் சூழ்நிலைகளைத் தவிர, இருபாலினக் குழந்தைகள் மீது கட்டாய அல்லது சம்மதமில்லாத மருத்துவ நடைமுறைகளைத் தடை செய்தல், அதே நேரத்தில் பெற்றோருக்கான ஆலோசனை மற்றும் உளவியல் சமூக ஆதரவை உறுதி செய்தல்;
    • முதிய திருநங்கைகளுக்கான நல நடவடிக்கைகளுடன், பாலினப் பாகுபாடற்ற வசதிகள், அனைவரையும் உள்ளடக்கிய மனிதவளக் கொள்கைகள், பணியிடக் குறைதீர்ப்பு வழிமுறைகள் மற்றும் கட்டாயப் பன்முகத் தன்மை வெளிப்படுத்தல்கள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய பணியிடங்களை ஊக்குவித்தல்; மற்றும்
    • முதிய திருநங்கைகள் நலத்திட்டங்களில் பதிவுசெய்யும் செயல்முறையை எளிதாக்குதல் மற்றும் சுய அடையாளத்தின் அடிப்படையில் பதிவு செய்வதைச் சாத்தியமாக்குதல், அத்துடன் திருநங்கைகளையும் உள்ளடக்கிய முதியோர் இல்லங்கள் மற்றும் சமூகக் காப்பகங்களை நிறுவுதல், தனியுரிமை, சுகாதார அணுகல், சமூகத் தொடர்பு மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை உறுதி செய்தல் ஆகியன இதன் முக்கியப் பரிந்துரைகளாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்