தேசிய நினைவுச்சின்னங்கள் ஆணையமானது ராஜஸ்தானில் உள்ள மங்கர்ஹ் என்ற மலைச் சிகரத்தினை ஒரு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
இந்த மலைக் குன்றானது குஜராத் - ராஜஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது.
இது 1913 ஆம் ஆண்டில் பில் பழங்குடியின விடுதலைப் போராளிகள் 1500 நபர்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு பழங்குடியினரின் எழுச்சி நடைபெற்ற இடமாகும்.
இந்த இடமானது ஆதிவாசிகளின் ஜாலியன் வாலா என்றும் அழைக்கப்படுவதால் அங்கு நினைவிடம் ஒன்றை அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
தேசியப் பண்டைய கால நினைவுச் சின்னங்கள் ஆனது 1958 ஆம் ஆண்டு பண்டைய நினைவுச் சின்னம் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் சிதிலங்கள் சட்டத்தின் கீழ் வரையறுக்கப் பட்டுள்ளது.
இந்தச் சட்டமானது நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
பில் பழங்குடியினர் பொதுவாக ராஜஸ்தானின் வில்லாளர்கள் என்று குறிப்பிடப் படுகிறார்கள்.
இவர்கள் தெற்காசியாவின் மிகப் பெரிய பழங்குடி இனத்தினர் ஆவர்.