TNPSC Thervupettagam

தேசிய விளையாட்டு விருதுகள் 2025

August 20 , 2026 5 days 151 0
  • இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகமானது தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்தது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு எந்த வீரரும் / வீராங்கனையும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
  • விதித் குஜராத்தி மற்றும் திவ்யா தேஷ்முக் (செஸ்), தேஜஸ்வின் சங்கர் (தடகளம்), காயத்ரி கோபிசந்த் மற்றும் ட்ரீசா ஜாலி (பேட்மிண்டன்) உள்ளிட்ட 17 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
  • முன்னாள் கால்பந்து வீரரும் பயிற்சியாளருமான ஐ. அருமைநாயகம் அர்ஜுனா விருதினை (வாழ்நாள்) பெற்றார்.
  • பர்பீர் சிங் (தடகளம்), சோட்டே லால் யாதவ் (குத்துச்சண்டை), நேஹா நந்தகுமார் சவான் (துப்பாக்கிச் சுடுதல்), தர்மேந்திர சிங் யாதவ் (குத்துச்சண்டை), மற்றும் வீரேந்தர் குமார் (மல்யுத்தம்) ஆகியோருக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப் பட்டது.
  • விளையாட்டை மேம்படுத்தியதற்காக புனேவில் உள்ள ராணுவ பாராலிம்பிக் நோட்  அமைப்பு (Army Paralympic Node), ராஷ்ட்ரிய கேல் புரோட்சஹான் புரஸ்கார் விருதைப் பெற்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்