தேசிய அளவிலான தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சியானது (SAREX-2020) இந்தியக் கடலோரக் காவல் படையால் கோவாவில் நடத்தப்பட்டது.
இந்தப் பயிற்சியில் முதல்முறையாக தேசிய SAR செயல்முறையின் 3 முக்கியமான துறைகளான, அதாவது மத்தியக் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம், மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் மற்றும் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆகியவை பங்கேற்றன.
இது ‘HAMSAR’ என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட கடல்சார் மற்றும் வான்வெளித் தேடல் மற்றும் மீட்பின் ஒத்திசைவைப் பெற்ற கருப்பொருளைக் கொண்டிருக்கின்றது.
தேசியக் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வாரியத்தின் (National Maritime Search and Rescue Board - NMSARB) உதவியுடன் இந்தியக் கடலோரக் காவல் படையினரால் SAREX பயிற்சியானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது.