TNPSC Thervupettagam

தேநீர் பைகளுக்கான BIS விதிமுறைகள்

June 13 , 2026 15 hrs 0 min 46 0
  • இந்தியத் தர நிர்ணய அமைப்பு (BIS) ஆனது முதல் முறையாகத் தேநீர் பைகளுக்கான தரநிலைகளை வெளியிட்டுள்ளது, இதில் எபிக்ளோரோஹைட்ரின் மற்றும் குளோரின் வெளுப்பாக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • எபிக்ளோரோஹைட்ரின் என்பது காகிதத்தை வலுப்படுத்தும் ஒரு இரசாயனமாகும், இது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய முதன்மையான ஒன்றாக வகைப்படுத்தப் பட்டு உள்ளது.
  • தேநீர் பைகளுக்கான காகிதத் தயாரிப்பில் குளோரின் வெளுப்பாக்கம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • புதிய தரநிலைகள் தேநீர் பைகளுக்கான பாதுகாப்பு, தரம், அடையாளமிடுதல் மற்றும் கண்காணிக்கக்கூடிய தன்மை தொடர்பான தேவைகளை பரிந்துரைக்கின்றன.
  • வடிகட்டும் காகிதம், நெய்யப்படாத துணி, மக்கும் பொருட்கள் அல்லது பிற உணவு தரப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் பைகளுக்கு இத்தரநிலைகள் பொருந்தும்.
  • இந்தியாவின் தேநீர் பைகளின் சந்தை மதிப்பு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்