முகநூலானது பொதுத் தேர்தலின்போது பொதுமக்கள் ஈடுபாட்டினை அதிகரிப்பதற்காக இந்தியாவிற்கென இரண்டு கருவிகளான ‘வேட்பாளர் இணைப்பு’ மற்றும் ‘வாக்களித்ததை பகிர்க’ எனும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வேட்பாளர் இணைப்பு
இந்த அம்சத்தின் மூலம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வாக்குறுதிகளை 20 வினாடிகள் நீண்ட காணொளியாக பதிவிடலாம்.
முகநூலானது அப்பகுதியில் உள்ள அனைத்து வேட்பாளர்களின் இத்தகைய காணொளிகளையும் அந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் கால வரிசையில் காண்பிப்பதை உறுதிப்படுத்துகிறது.
வாக்களித்ததைப் பகிர்க
இந்த அம்சமானது மக்களுக்கு வாக்களிக்கும் தகவல்களை வழங்குவதோடு அவர்கள் வாக்களித்ததைக் கொண்டாடவும் உதவுகிறது.
முகநூல் மற்றும் அதற்குச் சொந்தமான செய்திப் பயன்பாட்டுச் செயலி, கட்செவி அஞ்சல் ஆகிய செயலிகள் போன்றவை மீண்டும் மீண்டும் இந்திய அரசு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் ஆராயப்பட்டு வருகின்றன. மேலும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.