இந்தியாவிலுள்ள 17 வட்டார தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் இந்த அறிக்கையினைச் சமீபத்தில் வெளியிட்டது.
இந்த அறிக்கையானது இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் நிலவும் சுகாதாரப் பாதிப்புகள் மற்றும் ஏற்றத் தாழ்வுகளை ஆய்வு செய்கிறது.
நகர்ப்புறங்களில் உள்ள செல்வச் செழிப்புமிக்க மக்களை விட ஏழை மக்களில் ஆண்களின் ஆயுட்காலம் 9.1 ஆண்டுகள் குறைவாகவும் பெண்களின் ஆயுட்காலம் 6.2 ஆண்டுகள் குறைவாகவும் உள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்திய மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.
1960 ஆம் ஆண்டில் 18% ஆக இருந்த இதன் எண்ணிக்கையானது 2001 ஆம் ஆண்டில் 28.53% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 34% ஆகவும் உயர்ந்து விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
நகர்ப்புறங்களில் வாழும் சுமார் 30% பேர் ஏழை மக்கள் ஆவர்.