மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், குழந்தைகளுக்கான இந்தியாவின் முதலாவது மெய்நிகர் அறிவியல் ஆய்வகத்தினை திறந்து வைத்தார்.
இந்த ஆய்வகமானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் ஜிக்யாசா என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
இத்திட்டமானது இந்தியா முழுவதுமுள்ள அறிவியலாளர்களுடன் மாணவர்கள் உரையாட வழிவகுக்கும்.
இந்த ஆய்வகமானது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிச் சபையின் ஆய்வகங்களை மாணவர்கள் மெய்நிகர் முறையில் பார்வையிடவும் ஆராய்ச்சிக் கட்டமைப்புப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது.