நடமாடும் உணவுப் பரிசோதனை ஆய்வகங்களுக்கான இந்தியாவின் முதல் அங்கீகாரத் திட்டம்
August 17 , 2026 55 days 118 0
இது தேசிய பரிசோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான அங்கீகார வாரியத்தால் (NABL) தொடங்கப்பட்டது.
இந்த முயற்சியானது, நம்பகமான, தர உறுதி செய்யப்பட்ட மற்றும் சர்வதேச அளவில் தரப்படுத்தப்பட்ட உணவுப் பரிசோதனை சேவைகளை சமூகங்களுக்கு அருகிலேயே கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நம்பகமான, தர உறுதி செய்யப்பட்ட மற்றும் சர்வதேச அளவில் தரப்படுத்தப்பட்ட பரிசோதனை சேவைகளை நடமாடும் உணவுப் பரிசோதனை ஆய்வகங்கள் சமூகங்களுக்கு அருகிலேயே வழங்குவதற்கான ஒரு கட்டமைப்பை இது நிறுவுகிறது.
இது உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பை வலுப்படுத்தும், தரப் பரிசோதனைக்கான அணுகலை மேம்படுத்தும், விரைவான ஒழுங்குமுறைத் தலையீடுகளை ஆதரிக்கும் மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NABL என்பது இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) கீழ் அமைக்கப் பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பான இந்தியத் தரக் கவுன்சிலின் (QCI) ஓர் அங்கத்துவ வாரியமாகும்.
இது இந்தியாவில் உள்ள இணக்க மதிப்பீட்டு அமைப்புகளுக்கு (ஆய்வகங்களுக்கு) அங்கீகார சேவைகளை வழங்குகிறது.
இந்தியாவில், NABL அங்கீகாரம் என்பது பொதுவாக பல்வேறு அரசு/ ஒழுங்குமுறை/ சட்டரீதியான அமைப்புகளின் அங்கீகாரங்களுக்கு முன்னோடியாக உள்ளது.