தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தைக் கண்காணிக்க என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் (MoRTH) நடமாடும் தரக் கட்டுப்பாட்டு ஊர்திகளை அறிமுகப் படுத்தியுள்ளது.
ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா மற்றும் ஒடிசாவில் இந்த சோதனைத் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.
இந்த நடமாடும் தரக் கட்டுப்பாட்டு வேன்கள், மீயொலி துடிப்பு வேக மீட்டர்கள் மற்றும் எதிரெழுச்சி சுத்தியல்கள் போன்ற துளையிடா சோதனைக் கருவிகளைக் கொண்டு உள்ளன.
அரசாங்கம் நிகழ்நேரப் புவியிடங்காட்டி அமைப்பு (GPS) கண்காணிப்புடன் கூடிய தேசிய நெடுஞ்சாலை தரக் கண்காணிப்புத் தளத்தினையும் உருவாக்கி வருகிறது.