இந்திய நறுமணப் பொருட்கள் வாரியமானது, சமீபத்தில் நறுமணப் பொருட்கள் (மசாலாப் பொருட்கள்) பரிமாற்றத் தளத்தினை அறிமுகப்படுத்தியது.
இந்த தளமானது, இந்திய மசாலாப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் உலகம் எங்கிலும் உள்ள கொள்முதல் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒரு சந்திப்பு மையமாகச் செயல்படும்.
இது நாட்டிலேயே இது போன்ற முதல் வகை தளமாகும்.
இந்தத் தளத்தினை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தொடங்கி உள்ளது.
மொத்த தோட்டக்கலை ஏற்றுமதியில் மசாலாப் பொருட்களின் பங்கு 41 சதவீதம் ஆகும்.
இந்திய வேளாண் சரக்குப் பொருட்களில் மசாலாப் பொருட்கள் நான்காவது இடத்தில் உள்ளன.
முதல் மூன்று இடங்களில் கடல் பொருட்கள், பாஸ்மதி ரகம் சாராத அரிசி மற்றும் பாஸ்மதி அரிசி ஆகியவை உள்ளன.
உலகிலேயே மசாலாப் பொருட்களின் மீதான மிகப்பெரிய உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளர் நாடாக இந்தியா திகழ்கிறது.