சொத்து மேலாண்மை நிறுவனமான இன்வெஸ்கோ தலைமையிலான 700 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு நிதி ஒப்பந்தத்தில் ஸ்விகி நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
இதன் மூலம், ஸ்விக்கியின் மொத்த மதிப்பு தற்போது 10.7 பில்லியன் டாலர்களை எட்டி உள்ள நிலையில் இந்த நிறுவனம் தற்போது ஒரு டெகாகார்ன் (decacorn) நிறுவனம் என்ற நிலையினை அடைந்துள்ளது.
ஒரு டெகாகார்ன் நிறுவனம் என்பது 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான அளவிலான மதிப்பீட்டைக் கொண்ட ஒரு புத்தாக்க நிறுவனமாகும்.